×

ஒரே காட்சியில் 17 முறை காரில் மோதிய ஹீரோ

லாஸ்ஏஞ்சல்ஸ்: சமீபத்தில் வெளியான ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் ஹாலிவுட் படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரபலம் ஆனார், டாம் ஹாலண்ட். அவருடைய நடிப்பில் உருவான ஆக்ஷன் கலந்த திரில்லர் படமான அன்சார்டட் நேற்று வெளியானது.ஆங்கிலம் தவிர தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் இந்த படம் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. இதில், ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஒரு குழு புதையலை புதைத்து வைக்கிறது. அதை தேடி ஹீரோ டாம் ஹாலண்டும், வில்லன் கும்பலும் செல்வதுதான் கதை. இந்த படத்தில் ஆக்‌ஷன் காட்சியில் ஏற்பட்ட விபத்து பற்றி டாம் ஹாலண்ட் கூறியதாவது:உலகின் மிகப் பழமையான மர்மங்களில் ஒன்றான ஒரு புதையலை கண்டுபிடிக்க நானும், சுல்லி சல்லிவனும் போவோம். அப்படி போகும்போது பல சண்டை காட்சிகள் இடம்பெறும். அப்படியொரு பிரமாண்டமான காட்சிதான் விமான ஸ்டண்ட். இந்த காட்சிக்கு முன்பு நான் ஒரு காரில் மோதுவது போன்று ஒரு காட்சி இடம்பெறும். அந்தக் காட்சிக்காக மட்டும் நான் ஒரேநாளில் 17 முறை காரில் மோதிக்கொண்டேன். இதில் காயம் அடைந்தேன். கடும் வலியுடன் இந்த காட்சியில் நடித்து முடித்தேன். இவ்வாறு கூறினார்….

The post ஒரே காட்சியில் 17 முறை காரில் மோதிய ஹீரோ appeared first on Dinakaran.

Tags : Los Angeles ,Tom Holland ,Hollywood.… ,
× RELATED அமெரிக்காவில் ஹாலிவுட் நடிகர்...